Home இந்தியா இந்தியப் பிரதமருடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக இருந்தது: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்!

இந்தியப் பிரதமருடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக இருந்தது: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்!

408
0
SHARE
Ad

ind-pakபுதுடெல்லி, மே 28 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, “பாகிஸ்தானுக்கு வரும்படி விடுத்த அழைப்பை இந்தியப் பிரதமர் மோடி ஏற்றுகொண்டுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் அவநம்பிக்கையை போக்குவதற்கான முயற்சிகள் எடுப்பது அவசியம்.”

“இருநாடுகளுடனான பிரச்சனை குறித்து பேச்சு நடத்த பாகிஸ்தான் எப்பொழுதும் தயாராக உள்ளது. பொதுசெயல் திட்டம் வகுத்து பிரச்சனைகளை இரு நாடுகளும் தீர்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்தியா பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையின் முன்னோட்டமாக வெளியுறுவுத்துறை செயலர்கள் கூட்டம் விரைவில் நடைபெற  இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மிக நீண்ட காலமாக இருந்து வரும் இந்தியா பாகிஸ்தான் மோதல் தீர்க்கப்படவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.