Home உலகம் ஈரானுடன் அணுசக்தி தொடர்பான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை பற்றி ஐரோப்பா அறிவிப்பு!

ஈரானுடன் அணுசக்தி தொடர்பான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை பற்றி ஐரோப்பா அறிவிப்பு!

534
0
SHARE
Ad

downloadபுருஸ்செல், மே 28 – ஈரான் அரசு மேற்கொண்டு வரும் அணுசக்தித் திட்டங்கள் மீதான கவலைகளைப் போக்குவதற்கு, அந்நாட்டுடனான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை வியன்னாவில் எதிர் வரும் ஜூன் மாதம் 16-20 வரை நடைபெற உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்று அறிவித்தது .

உலகின் வல்லமை பெற்ற நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இணைந்து ஈரானுடன் மேற்கொள்ளும் இந்தப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்த பொதுமக்களின் கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பேச்சுவார்த்தையின் முன்னோட்டமாக நேற்று முன்தினம் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் சரிப்பை, கேதரின் ஆஷ்டன் இஸ்தான்புல்லில் சந்தித்தார்.

#TamilSchoolmychoice

ஈரானின் அணுசக்தித் திட்டம் எப்போதும் அமைதிக்கான பாதையில் இருக்கவேண்டும் என்று கருதும் மேற்கத்திய நாடுகள் யுரேனியம் செறிவூட்டப்படும் அளவை, பேச்சுவார்த்தையில் உட்படுத்தியுள்ளன.

இஸ்தான்புல்லில் நடைபெற்ற மிக நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை, அடுத்த மாதம் 16 முதல் 20ம் தேதி வரை வியன்னாவில் நடைபெறும் என்று கேதரின் ஆஷ்டனின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு முன்னர் நிபுணர்களின் சந்திப்பு நடைபெறும் என்பதையும் அவர் கூறியுள்ளார்.