Home World Cup Soccer 2014 உலகக் கிண்ண காற்பந்து குழுக்கள் அறிமுகம் # 2: நேரடியாக தகுதி பெற்ற பிரேசில் அணி!

உலகக் கிண்ண காற்பந்து குழுக்கள் அறிமுகம் # 2: நேரடியாக தகுதி பெற்ற பிரேசில் அணி!

579
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 28 – உலகக் கிண்ண காற்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற காற்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றியாளராக உலகக் கிண்ணத்தை வென்றது.

அதன் பின்னர், 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வரும் ஜூன் மாதம் 12 -ம் தேதி தொடங்கி ஜூலை 13 -ம் தேதி வரை பிரேசிலில் உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதில் 32 அணிகள் பங்கேற்கின்றன.

#TamilSchoolmychoice

அறிமுகம் #2: பிரேசில்

உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளில் இதுவரை பிரேசில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது. மேலும் இந்த முறை போட்டிகளை நடத்தும் நாடு என்பதால் பிரேசில் நேரடியாகவே இந்தப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுவிட்டது. மீதமுள்ள 31 அணிகளும் தகுதி சுற்றுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Team Brazil

(பிரேசில் அணியில் விளையாட இருக்கும் வீரர்கள்)

Brazil's coach Luiz Felipe Scolari

(பிரேசில் அணியின் பயிற்சியாளர் – லூயிஸ் ஃபிலிப் ஸ்காலரி)

படம்: EPA