Home நாடு தெலுக் இந்தான் இடைத்தேர்தல்: 238 வாக்குகள் பெரும்பான்மையில் மா வெற்றி!

தெலுக் இந்தான் இடைத்தேர்தல்: 238 வாக்குகள் பெரும்பான்மையில் மா வெற்றி!

831
0
SHARE
Ad

Mah-Siew-Keong-dyaa-sofya-teluk-intan-300x199தெலுக் இந்தான், மே 31  – இன்று நடைபெற்ற தெலுக் இந்தான் இடைத்தேர்தலில், தேசிய முன்னணி வேட்பாளர் மா சியூ கியாங் 238 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜசெக வேட்பாளர் டயானா சோஃப்யா முகமட் டவுட் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

தெலுக் இந்தான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சீ லியோங் பெங் (வயது 48)  கடந்த மே 1-ம் தேதி புற்றுநோயால் காலமானார்.எனவெ அத்தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

அதிகாரப்பூர்வ வாக்குகள் விபரம் பின்வருமாறு:- 

மா சியூ கியாங் (தேசிய முன்னணி) -20,157

டையானா சோஃபியா முகமட் டவுட் (ஜசெக) – 19,919

பெரும்பான்மை – 238