Home கலை உலகம் ஸ்ருதிஹாசனை காதலிக்கவில்லை – சுரேஷ் ரெய்னா விளக்கம்!

ஸ்ருதிஹாசனை காதலிக்கவில்லை – சுரேஷ் ரெய்னா விளக்கம்!

653
0
SHARE
Ad

shruthiடெல்லி, ஜூன் 1 – நான் எந்த ஒரு நடிகையுடனும் தொடர்பில் இல்லை என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக இணையத்தை வட்டம் அடித்த செய்தி, இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் – கமல் மகள் ஸ்ருதிஹாசனும் காதலிக்கிறார்கள் என்பது தான்.

இச்செய்தி குறித்து ஸ்ருதிஹாசன் எந்த ஒரு கருத்தையும் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிடவில்லை. நீண்ட நாட்களாகவே இந்த செய்தி வெளியாகிக் கொண்டே இருந்தது. பலரும் அந்த செய்தியில் ஸ்ருதிஹாசனின் ட்விட்டர் தளத்தினை குறிப்பிட்டார்கள்.

ஆனால், இதுகுறித்து எந்த ஒரு தகவலையும் ஸ்ருதி வெளியிடாத காரணத்தினால் செய்தி உண்மையாக தான் இருக்கும் என்று கூறிவந்தார்கள். ஆனால் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இச்செய்தி குறித்து தனது ட்விட்டர் தளத்தில் கருத்து கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“நிறைய பத்திரிகைகள் தகவல்களை உறுதிப்படுத்தாமல், செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். நான் இதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் யாருடனும் காதலிலும் இல்லை, காதலிக்கவும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா.