Home தொழில் நுட்பம் விண்டோஸ் போன் தளத்தில் வாட்ஸ்அப் மீண்டும் சேர்ப்பு!

விண்டோஸ் போன் தளத்தில் வாட்ஸ்அப் மீண்டும் சேர்ப்பு!

532
0
SHARE
Ad

whatsapp 1ஜூன் 3 – திறன்பேசிகள் மூலம் குறுந்தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகள் போன்றவற்றினை செலவின்றி பகிர்ந்து கொள்வதற்கு பயன்படும் செயலியான ‘வாட்ஸ்அப்’ (WhatsApp), சமீபத்தில் குறிப்பிட்ட சில தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக  விண்டோஸ் போன் ஸ்டோர் தளத்தில் இருந்து (Windows Phone Store) நீக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது பல புதிய அம்சங்களுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மேம்படுத்தப்பட்ட செயலியில், பயனர்கள் மற்றவருடன் கலந்துரையாடல் (Chat) செய்து கொண்டே பின்னணி புகைப்படத்தினை மாற்றி அமைக்க முடியும்.

#TamilSchoolmychoice

மேலும், அக்கௌண்ட் ப்ரைவசி (Account Privacy) -க்கான பல சிறப்பான சாத்தியக் கூறுகள், குறுந்தகவல் அறிவிப்புகளுக்கான டோன்களை விருப்பப்படி மாற்றியமைத்தல் போன்ற வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. 

இந்த புதிய வசதிகளின் காரணமாக விண்டோஸ் போன்களுக்கான வாட்ஸ்அப் பயனாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.