Home வணிகம்/தொழில் நுட்பம் இந்திய மாம்பழங்களுக்கான தடை மறு ஆய்வு: ஐரோப்பிய அதிகாரிகள் இந்தியா வருகை!

இந்திய மாம்பழங்களுக்கான தடை மறு ஆய்வு: ஐரோப்பிய அதிகாரிகள் இந்தியா வருகை!

554
0
SHARE
Ad

imagesலண்டன், ஜூன் 3 – ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மாம்பழங்கள் அடங்கிய சில பெட்டிகள் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மே மாதம் முதல் மாம்பழ ஏற்றுமதிக்கு அங்கு தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடை உத்தரவு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடை உத்தரவை விலக்க பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் உறுப்பினரான கீத் வஸ் பெரும் முயற்சி எடுத்து வருகின்றார்.

கடந்த புதன்கிழமை அன்று பிரஸ்ஸல்ஸ் சென்றிருந்த அவர் இந்தத் தடை விஷயமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் விவசாயத்துறை ஆணையர் டசியன் சியலோசையும் மற்ற மூத்த அதிகாரிகளையும் சந்தித்தார். இதன் விளைவாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழு வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வர ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இந்தத் தடை உத்தரவினால் இந்திய மாம்பழ வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தின் வர்த்தகமும் பெரும் தொய்வை சந்தித்துள்ளது. இந்தத் தடை அடுத்த ஆண்டு வரை தொடர்ந்தால் இது இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவுகளை சீர்குலைக்கும் என்றும்  கருதப்படுகின்றது. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக்குழு இந்தியா வருவதற்குள் இங்கிலாந்து அரசும் தங்களுடைய அதிகாரிகளை அனுப்பி நிலுவையில் உள்ள விவகாரங்களை சரி செய்ய முயற்சிக்க வேண்டும் என்று பிரதமர் டேவிட் கேமரூனுக்கு கீத் வஸ் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகின்றது.