Home வணிகம்/தொழில் நுட்பம் பாகிஸ்தானுடன் ஆயுத வர்த்தகம் செய்ய ரஷ்யா முடிவு!

பாகிஸ்தானுடன் ஆயுத வர்த்தகம் செய்ய ரஷ்யா முடிவு!

550
0
SHARE
Ad

Russianமாஸ்கோ, ஜூன் 5 – பாகிஸ்தானுக்கான ஆயுத ஏற்றுமதி தடையை ரஷ்யா நீக்கியுள்ளதாக ரஷ்ய நாட்டு ஆயுத தயாரிப்பு நிறுவனமான ரோஸ்டெக் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி செர்ஜி செமிஸாவ் கூறியதாவது:-

“பாகிஸ்தான் நாட்டுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யா முடிவு செய்துள்ளது. எம்ஐ-35 என்ற போர் ஹெலிகாப்டரை அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தியை ரஷ்யாவின் இடார்-டாஸ் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கு பல ஆண்டுகளாக அதிநவீன ஆயுதங்களை ரஷ்யா அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகின்றது. இந்நிலையில் இந்திய ராணுவத்திடம் உள்ள பழைய ஆயுதங்களை நவீனப்படுத்தும் விதமாக, இஸ்ரேல், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடம் ஆயுதங்களை இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாகவே ஆயுத ஏற்றுமதிக்காக இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானை ரஷ்யா தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.