Home உலகம் தமிழர் பகுதிகளுக்கு போலீஸ் அதிகாரங்கள் வழங்க இலங்கை மறுப்பு!

தமிழர் பகுதிகளுக்கு போலீஸ் அதிகாரங்கள் வழங்க இலங்கை மறுப்பு!

558
0
SHARE
Ad

SRI_LANKA_WAR_DISPLA_32029fகொழும்பு, ஜூன் 5 – இலங்கையில் மத்திய அரசாங்கத்திற்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் நிலவி வரும் பிரச்சினைகளை தணிக்கும் ஒரு திட்டமாக வட்டார அளவில் போலீஸ் அதிகாரங்களை மாற்றிக்கொடுக்கும் முன்மொழிதலை இலங்கை அரசாங்கம் மீண்டும் நிராகரித்துள்ளது.

1987ஆம் ஆண்டில் இலங்கைக்கும் இந்தியாவுக்கு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக போலீஸ் மற்றும் நிலம்-நீதிலான நிர்வாகங்களை தமிழர்கள் பெரும்பான்மையான ஆளும் அந்ததந்த வட்டாரங்களின் ஆதிக்கத்திற்கே விட்டு விட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

இந்த முன்மொழிதல் இலங்கை அரசியல் சாசனத்திலும் இடம் பெற்றுள்ளது. தனது பதவியேற்பு விழாவிற்கு வந்திருந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இந்தத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் செயல்படுத்த வேண்டும் என்றும் அதன்மூலம் இலங்கைத் தமிழர்களுக்கும் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் இடையிலான பிரச்சினைகள் குறையலாம் என்றும் எடுத்துரைத்துள்ளார். இருப்பினும், இந்தத் திட்டத்தை தங்களால் செயல்படுத்த முடியாது என இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இலங்கை அரசியல் சாசனம் குறித்த ஆழமான விவாதங்கள் எதையும் அதிபர் மகிந்தா ராஜபக்சே, மோடியுடன் நடத்தவில்லை என்றும் பெரிஸ் அறிவித்தார். போலீஸ் அதிகாரங்களை வட்டார ஆட்சி அமைப்புகளுக்கு மாற்றிக்கொடுப்பது என்பது முடியாத ஒன்று என்றும் பெரிஸ் எதிர்க்கட்சிகளின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் நாடாளுமன்றத்தில் கூறினார். அதற்கான காரணங்கள் எதையும் அவர் கூறவில்லை.

பல்லாண்டுகளாக தொடர்ந்து வரும் இலங்கைத் தமிழர் போராட்டங்களினால் இலங்கையில் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.  1987 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் காணமாக இலங்கை அரசியல் சாசனத்தில் கொண்டு வரப்பட்ட 13 ஆவது சட்டதிருத்தம் அமலாக்கப்பட வேண்டும் என்று அடுத்தடுத்த வந்த இந்திய அரசாங்கங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்குதல் அளித்தாலும் இதுவரை இலங்கை மறுத்தே வந்திருக்கின்றது. இதே நெருக்குதலைத் தான் மோடியும் தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு அளித்துள்ளதாக அரச தந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.