Home தொழில் நுட்பம் இனி பெற்றோர் அனுமதியுடன் சிறுவர்களும் பேஸ்புக் கணக்கு துவங்கலாம்!

இனி பெற்றோர் அனுமதியுடன் சிறுவர்களும் பேஸ்புக் கணக்கு துவங்கலாம்!

589
0
SHARE
Ad

FB_APஜூன் 5 – இனி 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் நட்பு ஊடகமான பேஸ்புக்கில் தனி கணக்குகளைத் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பெற்றோரின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே இந்த வசதி சாத்தியமாகும் வகையில் புதிய மாற்றங்கள் செய்யப்படுள்ளன.

குழந்தைகள் இணைய தனியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் படி, 13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பேஸ்புக் உட்பட எத்தகைய சமூக வலைதளங்களிலும் தங்களது கணக்குகளை துவங்க தடை செய்யப்பட்டுள்ளது.

எனினும் பேஸ்புக் நிறுவனம் இந்த தடை உத்தரவை நீக்கி, இதற்கான காப்புரிமையை அமெரிக்க பெடரல் வர்த்தக ஆணையத்திடம் பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

இதன்படி 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் பேஸ்புக் கணக்கை, தங்களது பெற்றோரின் ஒப்புதலுடன் பெறலாம். இதற்காக பேஸ்புக்கில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.

13 வயதுக்கு உட்பட்ட பயனர்கள் தங்களது கணக்கை துவக்க முயற்சித்தால், அந்தப் பயனரிடம் அவர்களது பெற்றோர் வைத்திருக்கும் கணக்கு குறித்த தகவல்கள் கேட்கப்படும்.

அதன்பின், பெற்றோரின் கணக்கின் மூலம் ஒப்புதல் அளிக்கும்படியாக மின்னஞ்சல் அனுப்பப்படும். பயனருடைய வயது, பெற்றோர் விவரம் ஆகிய விவரங்கள் அங்கீகரிக்கப்பட்ட பின், பேஸ்புக் கணக்கை துவங்கிவிடலாம். பெற்றோரின் கணக்கு மூலம் விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்படும்.

இதன் மூலம் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் என பேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.