Home உலகம் ஆப்கானிஸ்தானில் கடும் வெள்ளப்பெருக்கு – 74 பேர் பலி! 

ஆப்கானிஸ்தானில் கடும் வெள்ளப்பெருக்கு – 74 பேர் பலி! 

471
0
SHARE
Ad

1399090749Afghanistan-floodsகாபூல், ஜூன் 8 – ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அந்நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள நான்கு கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

இதில் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்து தவிக்கின்றனர். இந்த காட்டு வெள்ளத்தில் சிக்கி இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கடும் வெள்ளப் பெருக்கில் ஆப்கன் வடக்குப்பகுதி சிக்கியுள்ளதால் வேளாண் பயிர்கள், கால்நடைகள் உட்பட அனைத்து உடமைகளும் நீரில் மூழ்கிப்போயின. 

“வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கான  குடிநீர், உணவு, கூடாரம் அமைப்பதற்கான பொருட்கள், கம்பளி ஆகியவை அவசரமாக தேவைப்படுகின்றன” என்று பாக்லான் மாகாண போலீஸ் அதிகாரி ஜாவேத் பாஷரத் தெரிவித்துள்ளார்.