Home இந்தியா 10 ஆண்டுகளுக்குப் பின் ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு மீண்டும் பதவியேற்பு!

10 ஆண்டுகளுக்குப் பின் ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு மீண்டும் பதவியேற்பு!

542
0
SHARE
Ad

chandrababu-naiduவிஜயவாடா, ஜூன் 9 – விஜயவாடா அருகேயுள்ள நாகார்ஜுனா நகரில் நேற்றிரவு நடைபெற்ற விழாவில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதை அடுத்து சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சியும், ஆந்திராவில் (சீமாந்திராவில்) தெலுங்கு தேசம் கட்சியும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தன.

தெலுங்கானா முதல்வராக டி.ஆர்.எஸ். தலைவர் சந்திரசேகர ராவ் கடந்த வாரம் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு நேற்று ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.

#TamilSchoolmychoice

புதிய ஆந்திரத்தின் (சீமாந்திராவின்) முதல் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

அவருடன் 3 பெண்கள் உள்பட 19 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அவர்களில் இருவர் பாஜகவைச் சேர்ந்தவர்கள்.

விஜயவாடா அருகேயுள்ள நாகார்ஜுனா நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

தெலுங்கு மொழியில் கடவுளின் பெயரால் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து 19 பேர் மாநில அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில் பாஜகவைச் சேர்ந்த இருவரும் அடங்குவர்.

விழாவில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவில்லை என்ற போதிலும்,

டுவிட்டர் இணையதளத்தின் மூலம் சீமாந்திராவுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் சந்திரபாபுவின் நிர்வாக அனுபவம் அம்மாநிலத்தை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு செல்லும் எனவும் கூறியிருந்தார். மாநில வளர்ச்சியை நோக்கிய அவரது பயணத்திற்கு தனது வாழ்த்துகள் என்றும் மோடி அதில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.