Home இந்தியா நாடாளுமன்ற முதல் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை!

நாடாளுமன்ற முதல் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை!

777
0
SHARE
Ad

Pranab Mukherjeeடெல்லி, ஜூன் 9 – 16 ஆவது நாடாளுமன்ற முதல் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது உரையை தொடங்கினார். பாஜக கூட்டணி அரசின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இணைந்த கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துகிறார். காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவர் உரையைத் தொடங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்தார், தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், ” மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும், வறுமையை ஒழிக்க புதிய அரசு பாடுபடும், நதி நீர் இணைப்பு குறித்து பரிசீலிக்கப்படும்” என்பது உள்ளிட்ட அரசின் பல்வேறு செயல் திட்டங்களை முன்வைத்து உறையாற்றி வருகிறார்.

#TamilSchoolmychoice

உரை நிகழ்த்தப்பட்ட பின்னர் இரு அவைகளும் தனித்தனியாக அரை மணி நேரம் செயல்படும். ஜனாதிபதி உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாளையும், நாளை மறுநாளும், இரு அவைகளிலும் விவாதம் நடைபெறும்.

விவாதத்துக்கு பிறகு அவையில் பிரதமர் நரேந்திர மோடியும், மாநிலங்களவையில் பாஜக குழு தலைவர் அருண் ஜெட்லியும் பதில் அளிப்பார்கள். அதைத் தொடர்ந்து நாளை மறுநாள் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படும் என தெரிகிறது.