Home உலகம் உலகக் கிண்ண காற்பந்து தொடக்க விழா: படக் காட்சிகள் – ஜெனிஃபர் லோபஸ் கவர்ச்சி ஆட்டம்...

உலகக் கிண்ண காற்பந்து தொடக்க விழா: படக் காட்சிகள் – ஜெனிஃபர் லோபஸ் கவர்ச்சி ஆட்டம் – பாடல்களுடன் வண்ணமயமான கோலாகலம்

630
0
SHARE
Ad

Opening Ceremonyசாவ் பாலோ (பிரேசில்) ஜூன் 13 – அகில உலகத்திலும் உள்ள கோடிக்கணக்கான இரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த பிஃபா உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்கான தொடக்க விழா, பிரேசில் நாட்டின் தலைநகரான பிரேசிலியாவில் வண்ணமயமான ஆடல்-பாடல்களுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

பிரேசில் நேரப்படி ஜூன் 12ஆம் தேதி மாலையில் – மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணியளவில் –  இந்த தொடக்க விழா நடந்தேறியது

உலகம் எங்கும் நேரடியாக தொலைக்காட்சியின் வழி ஒளிபரப்பப்பட்ட தொடக்க விழாவை, இதுவரை இல்லாத அளவுக்கு கோடிக்கணக்கான இரசிகர்கள் பார்த்து மகிழ்ந்திருப்பார்கள் என நம்பப்படுகின்றது.

#TamilSchoolmychoice

Opening Ceremony

ஜெனிஃபர் லோப்பஸ் (இடம்) அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆண் பாடகர் பிட்புல் (நடுவில்) – பிரேசில் பாடகி கிளாவுடியா லெய்ட் 

முதலில் ஒப்புக்கொண்டு விட்டு பின்னர் வரமாட்டேன் என்று அடம் பிடித்த உலகப் புகழ் பெற்ற அமெரிக்கப் பாடகி ஜெனிஃபர் லோபஸ் இறுதி நேரத்தில் இந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.

தனது கால் அழகையும் –  திறந்த மார்பையும் காட்டும் கவர்ச்சியான பச்சை வண்ண உடைகளோடு, நடு நாயகமான மேடையில் தோன்றி தனது பாடலை விறுவிறுப்பான ஆட்டத்தோடு வழங்கினார் ஜெனிபர் லோப்பஸ்.

வண்ணமயமான பல்வேறு வகையான ஆடை வடிவங்களுடன், பல குழுக்கள் மேடையில் ஆடி வலம் வந்தன.

உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் தொடக்க விழா படக் காட்சிகளை இங்கே காணலாம்:-

Opening Ceremony

Opening Ceremony

Opening Ceremony

படங்கள்: EPA