Home இந்தியா வதோதராவில் மோடியின் தேர்தல் செலவு ரூ.50 லட்சம் – தேர்தல் ஆணையத்தில் செலவுக்கணக்கு தாக்கல்!

வதோதராவில் மோடியின் தேர்தல் செலவு ரூ.50 லட்சம் – தேர்தல் ஆணையத்தில் செலவுக்கணக்கு தாக்கல்!

462
0
SHARE
Ad

MODIவதோதரா, ஜூன் 16 – பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்ட வதோதரா தொகுதியில் அவரது தேர்தல் செலவு ரூபாய்.50 லட்சம் (மலேசிய ரிங்கிட் 2,76,000) என்று கணக்கிடப்பட்டுள்ளது.

நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, வாரணாசி மற்றும் வதோதரா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றியடைந்தார். பின்பு வாரணாசியை மட்டும் வைத்துக் கொண்டு, வதோதரா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், பிரதமரின் வதோதரா தொகுதி தேர்தல் பிரசாரத்திற்கு மொத்தமாக ரூபாய் 50 லட்சத்து 3 ஆயிரத்து 598 செலவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ

#TamilSchoolmychoice

ந்த தேர்தல் செலவீன கணக்கு விவரங்களை தேர்தல் ஆணையத்தில் மோடியின் தேர்தல் பொறுப்பாளர் மற்றும் வதோதரா மாநகராட்சி மேயரான பரத்ஷா தலைமை தேர்தல் அதிகாரியிடம் நேற்று தாக்கல் செய்துள்ளார்.