தற்போது தீவிரவாத படை சிறிது, சிறிதாக முன்னேறி சில நகரங்களை கைப்பற்றியுள்ளது. அவர்கள் பாக்தாத் நகரின் வடக்கு பகுதியை நோக்கி முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. இதனால் 70 லட்சம் மக்கள் வசிக்கும் அந்த நகரில் அரசு தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் கடுமையாக செய்யப்பட்டுள்ளது.
திவிரவாதிகள் பாக்தாத் நகரத்தை நோக்கி முன்னேறி கொண்டிருப்பதால் அங்கு உணவு பொருட்களின் விலைகள் முன்பு எப்போதும் இல்லாத அளவில் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
பாக்தாத் நகரிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்தியர்கள் பலர் வசிக்கின்றனர். தீவிரவாத தாக்குதல்களால் ஈராக் நாடு கடுமையான பதற்றத்தில் இருப்பதால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.