சால்வடோர் (பிரேசில்), ஜூன் 17 – இன்று அதிகாலை மலேசிய நேரப்படி 3 மணிக்கு நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளுக்கான ‘ஜி’ பிரிவுக்கான முதல் ஆட்டத்தில் நைஜீரியாவும், ஈரானும் விளையாடின.
இதில் இரண்டு அணிகளுமே 0-0 என்ற கணக்கில் கோல் எதுவும் போடாமல் ஆட்டம் டிராவில் முடிந்தது.
போட்டி துவங்கியது முதல் நைஜீரியா அணி வீரர்கள் பந்தை தங்கள் வசப்படுத்த கடும் போராட்டம் நடத்தினர். ஆனால் அவர்களால் கோல் அடிக்கமுடியவில்லை.
அதே நேரத்தில் கோல் அடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளோடு ஈரான் அணி வீரர்கள் எடுத்த அத்தனை முயற்சிகளையும் நைஜீரியா அணி முறியடித்தது.
இரண்டாவது பாதியில் விறுவிறுப்பாக துவங்கிய ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடித்துவிடப் போராடினர். ஆனால் இறுதியில் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
கடந்த ஜூன் 12 -ம் தேதி உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள் துவங்கியது முதல் எந்த ஆட்டமும் டிராவில் முடியவில்லை. டிராவில் முடிந்த முதல் ஆட்டம் ஈரான் – நைஜீரியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த ஆட்டத்தின் சில படக் காட்சிகளை இங்கே காணலாம்.
படங்கள்: EPA