Home உலகம் சீனாவில் 17 இராணுவ வீரர்கள் வெடிவிபத்தில் பலி: தீவிரவாத அமைப்பு காரணமா?

சீனாவில் 17 இராணுவ வீரர்கள் வெடிவிபத்தில் பலி: தீவிரவாத அமைப்பு காரணமா?

555
0
SHARE
Ad

chinaபெய்ஜிங், ஜூன் 19 – மத்திய சீனாவில் உள்ள ஹுனான் மாகாணத்தின் ஹென்ங்யாங் நகரில் அந்நாட்டு இராணுவத்தின் ஆயுத சேமிப்புக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 17 இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

உலகின் பெரும் இராணுவப் படையைக் கொண்டுள்ள சீனா, கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்திற்காக அதிக அளவில் செலவிடப்படுவதால் வீரர்களின் வாழ்க்கை முறைகளும், ஆயுதங்களின் தரங்களும் மேம்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.

china,இருந்தபோதிலும், மிகப் பெரிய நிலப்பரப்பில் விரிந்து கிடக்கும் படைப் பிரிவால் அவற்றை மேற்பார்வையிடுவது என்பது தளர்வாகவே உள்ளது என்று கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மேலும், சீன இராணுவத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லாமல் மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கும். இங்கு நடைபெறும் வெடி விபத்துகள், விமான விபத்துகள் போன்ற அனைத்தின் விபரங்களும் அரசால் கட்டுப்படுத்தப்படும்.

நேற்றுமுன்தினம்  நடந்த சம்பவமும் விபத்து என்றே சீனஅரசால் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், வடமேற்கு பகுதியில் சுதந்திரத்திற்காகப் போராடிவரும் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் சீன பாதுகாப்பு படைகள் சமீப காலமாக அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாவது குறிப்பிடத்தக்கது.