Home கலை உலகம் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்!

விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்!

756
0
SHARE
Ad

vijay,சென்னை, ஜூன் 19 – ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நிலையில், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவகாரம் கொஞ்ச காலமாகவே கோலிவுட்டில் எழுந்து கொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் இப்படி மூன்று தலைமுறை முன்னணி இணைகள் இந்தப் போட்டியை சந்தித்து உள்ளார்கள். அவற்றில் எம்.ஜி.ஆர்.-ரஜினி வெற்றியும் பெற்றனர்.

மூன்றாம் தலைமுறையில் யார் வெற்றிபெறுவார்கள் என்று பலர் ஆவலோடு எதிர்பார்க்க, தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. தமிழில் வெளிவரும் வார இதழ் ஒன்று தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற கருத்துக் கணிப்பை கடந்த சில மாதங்களாக நடத்தி வந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தற்போது கருத்துக் கணிப்புகளின் முடிவை அந்த வார இதழ் வெளியிட்டிருக்கிறது. அதில் விஜய் 12,80,300 வாக்குகள் பெற்று விஜய் முதலிடம் பிடித்துள்ளார்.

விஜய்க்கு அடுத்தப்படியாக 12,17,650 வாக்குகள் பெற்று அஜித் இரண்டாவது இடத்தில் உள்ளார். சூர்யா 5,47,050வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும், தனுஷ் 1,58,900 வாக்குகள் பெற்று நான்காம் இடத்திலும் உள்ளனர்.

அதேசமயம், முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஷால் மற்றும் கார்த்தி ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெறாதது ஆச்சரியமளிக்கிறது.

விஜய்யின் பிறந்த நாளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இது அவருடைய ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.