Home இந்தியா சுஷ்மா சுவராஜுடன் ரஷ்ய துணைப் பிரதமர் டமிட்ரி ஓ ரோகோசின் சந்திப்பு!

சுஷ்மா சுவராஜுடன் ரஷ்ய துணைப் பிரதமர் டமிட்ரி ஓ ரோகோசின் சந்திப்பு!

654
0
SHARE
Ad

sushma-swarajபுதுடில்லி, ஜூன் 19 – இந்தியா வந்துள்ள ரஷ்ய துணைப் பிரதமர் டமிட்ரி ஓ ரோகோசின், டில்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியாவும், ரஷ்யாவும் மிக நீண்ட காலமாக நட்பு நாடுகளாக விளங்கி வருகின்றன. சமீபத்தில் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு,ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது அவர், இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த ஆர்வமுடன் இருப்பதாக கூறினார்.இந்நிலையில் இரு தலைவர்களும் இந்த ஆண்டு சந்திப்பதுபற்றி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

#TamilSchoolmychoice

இதற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக 2 நாள் அரசு முறை பயணமாக அந்த நாட்டு துணைப் பிரதமர் டிமிட்ரி ஓ ரோகோசின் இந்தியா வந்துள்ளார்.

நேற்று அதிகாலை டில்லி வந்த அவர், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளிடையே வர்த்தகம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு விவகாரங்களில் இரு தரப்பு பிரச்சனைகள் குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிராந்திய மற்றும் அனைத்துலக பிரச்சனைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்தும் இரு தலைவர்களும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கூடங்குளத்தில் 3-ஆவது மற்றும் 4-ஆவது அணு உலை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இங்கு அந்த நாட்டு ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ள 2 அணு உலைகளில், முதல் உலை செயல்பட தொடங்கியுள்ளது. இந்திய அணுசக்தி பாதுகாப்பு சட்டத்தை ரஷ்யா கொள்கை ரீதியில் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து,

கூடங்குளத்தில் 3 மற்றும் 4-ஆவது உலைகள் அமைப்பது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் இரு நாடுகளிடையே பொது கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

இந்திய பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய துணைப் பிரதமர் டிமிட்ரி ஓ ரோகோசின், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசுகிறார்.

மேலும் பாதுகாப்பு அமைச்சர்அருண் ஜெட்லி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.