பெங்களூரு, ஜூன் 19 – சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரின் இறுதி வதாம் தொடங்கியது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மைக்கேல் குன்கா முன் வாதம் ஆரம்பமானது.
நீதிமன்றம் 4 முறை கண்டனம் தெரிவித்ததை அடுத்து ஜெயலலிதா தரப்பு வாதத்தை தொடங்கியது. ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் 2 மாதங்கள் இறுதிவாதத்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் முதல் குற்றவாளி என்பதால் ஜெயலலிதா தரப்பின் இறுதிவாதம் முதலில் தொடங்கியது. ஜெயலலிதா தரப்புக்கு பிறகு சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பின் இறுதி வாதம் நடைபெறவுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டோரின் இறுதி வாதத்துடன் சொத்துக்குவிப்பு வழக்கு முடிவுக்கு வருகிறது. தடை ஏதுமின்றி இறுதி வாதம் நடைபெற்றால் ஆகஸ்ட் இறுதியில் தீர்ப்புக் கூறப்படலாம் என்று எதிர்ப்பர்க்கப்படுகிறது.