Home நாடு ராயர் மீது இன்று தேச நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை!

ராயர் மீது இன்று தேச நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை!

981
0
SHARE
Ad
Rayer

ஜார்ஜ்டவுன், ஜூன் 19 – ஜசெக கட்சியின் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் மீது இன்று ஜார்ஜ்டவுன் அமர்வு நீதிமன்றத்தில் சுமத்தப்படுவதாக இருந்த தேச நிந்தனை குற்றச்சாட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அரசாங்க துணை வழக்கறிஞர் (டிபிபி) தனது தெரிவித்ததாக ராயரின் வழக்கரிஞரான கோபிந்த் சிங் டியோ கூறியுள்ளார்.

இது குறித்து கோபிந்த் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. டிபிபி இடமிருந்து கூடுதல் தகவல் வரும் வரை காத்திருப்போம்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலின் போது, ஆயர் ஈத்தாமில் ஜசெகவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த ராயர், அம்னோ கட்சியை ‘செலாக்கா அம்னோ’ என்று விமர்சித்ததற்காக, ராயருக்கு எதிராக 14 புகார்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த புகார்களை அடிப்படையாகக் கொண்டு, நேற்று ராயர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.

ராயர் மீது இன்று அமர்வு நீதிமன்றத்தில் தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.