Home நாடு ஸ்பெயின் அணி தோல்வி: நஜிப்பின் ஆணித்தரமான கணிப்பு பலிக்கவில்லை!

ஸ்பெயின் அணி தோல்வி: நஜிப்பின் ஆணித்தரமான கணிப்பு பலிக்கவில்லை!

461
0
SHARE
Ad

Group B - Spain vs Chile

கோலாலம்பூர், ஜூன் 20 – கடந்த 2010 உலகக் கோப்பை காற்பந்து போட்டியில் வெற்றி வாகை சூடி, சாம்பியன் பட்டத்தை தன்னகத்தே கொண்டிருந்த ஸ்பெயின் அணி தற்போது நடைபெற்று வரும் 2014-ம் ஆண்டிற்கான உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் முதல் சுற்றிலே தகுதியை இழந்து ஆட்டத்தில் இருந்து வெளியேறியது அனைவருக்கும் பேரதிர்ச்சியை தந்தது.

சிலியுடன் 0-2 என்ற கோல் கணக்கிலும், ஹாலந்துடன் 1-5 என்ற கோல் கணக்கிலும் ஸ்பெயின் அணி தோற்றது ஸ்பெயின் ரசிகர்களுக்கு மிக வருத்தத்தை தந்ததுடன், என்ன ஆயிற்று ஸ்பெயினுக்கு என்ற கேள்வியையும் ஏற்படுத்தியது.

#TamilSchoolmychoice

இது ஒரு புறம் இருக்க, ஸ்பெயின் அணி தான் இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்,காற்பந்துப் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னரே தானாக முன்வந்து தனது கருத்தை அவ்வளவு உறுதியாக தெரிவித்தார்.

239 பேருடன் மாயமான மாஸ் எம்எச் 370 விவகாரத்தில் கூட நஜிப் அவ்வளவு உறுதியாக எதையும் வாய் திறந்து கூறவில்லை.

அப்படிப்பட்ட நஜிப்பே, மாஸ் விமானம் மாயமானது தொடர்பான தனது கவலைகளை எல்லாம் மறந்து விட்டு, தானாக முன்வந்து ஸ்பெயின் அணி தான் வெல்லும் என்று தனது கணிப்பை தெரிவித்தார்.

இருந்தும், துரதிருஷ்வசமாக ஸ்பெயின் அணி ஏனோ படுதோல்வி கண்டுவிட்டது.

கடந்த உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் ஸ்பெயின் அணிக்கு, ‘ஆக்டோபஸ் உத்தி’ கைகொடுத்த போது அதை நம்பி பந்தயம் கட்டிய சூதாட்டக்காரர்கள்,

இந்த முறை, நஜிப்பின் வாக்கை நம்பி, ஸ்பெயின் மீது எத்தனை பேர் பந்தையம் கட்டினார்களோ?

காற்பந்து போட்டியில் நஜிப்பின் ஆரூடம் பலிக்கவில்லை. இனி அரசியல் விவகாரங்களிலாவது பலிக்கிறதா பார்ப்போம்!