Home இந்தியா இலங்கை முஸ்லீம்களுக்கு பாகிஸ்தான் தீவிரவாதப் பயிற்சி – சு. சாமி குற்றச்சாட்டு!

இலங்கை முஸ்லீம்களுக்கு பாகிஸ்தான் தீவிரவாதப் பயிற்சி – சு. சாமி குற்றச்சாட்டு!

583
0
SHARE
Ad

subramanian-swamyடெல்லி, ஜூன் 20 – இலங்கையைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கு பாகிஸ்தான் தீவிரவாதப் பயிற்சி அளித்து வருவதாக சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

”இலங்கையில் உள்ள முஸ்லீம்களுக்குப் பாகிஸ்தான் பயிற்சி அளிக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு இலங்கை அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.

இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து தீவிரவாத்த்தை விரட்டியடிக்க இந்தியாவும், இலங்கையும் இணைந்து செயல்பட வேண்டியது முக்கியம். இதுதொடர்பாக இலங்கையுடன் இந்தியா இணைந்து செயல்பட வேண்டும்.

#TamilSchoolmychoice

பாகிஸ்தானியர்களால் பயிற்சி அளிக்கப்படும் இலங்கை முஸ்லீம்கள் இந்தியாவுக்குள் குறிப்பாக தமிழகத்திற்குள் ஊடுறுவி வருகிறார்கள். இது அபாயகரமானது.

பாஜக, தமிழக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து கொண்டு ஒரு தவறை செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள்தான்” என்றார் சு.சாமி.