ஆந்திரா சென்றவர் அங்கேயே தங்கி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் பட இயக்குனர் களஞ்சியம், தான் இயக்கிவரும் ஊர் சுற்றி புராணம் என்ற படத்தில் அஞ்சலியை நடிக்க வைத்தார்.
அதில் தொடர்ந்து நடிக்க அவர் மறுக்கிறார். என் படத்தில் நடிக்காமல் வேறு தமிழ் படங்களில் நடிக்க அஞ்சலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் களஞ்சியம் புகார் அளித்தார்.
ஆனால் களஞ்சியம் படத்தில் நடிப்பதில்லை என்று உறுதியுடன் அவர் இருப்பதாகவும் இதனால் தமிழில் மற்ற படங்களில் நடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை தெலுங்கு படங்களே போதும் என்ற முடிவுடன் அஞ்சலி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் டைரக்டர் சுராஜ் இயக்கும் தமிழ் படத்தில் அஞ்சலி நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதுபற்றி சுராஜ் கூறும்போது. நான் இயக்கும் புதிய படத்தில் அஞ்சலி நடிக்கிறார்.
பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அஞ்சலி நடிக்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் அவர் என் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டார் என்றார். இயக்குனரின் இந்த அறிவிப்பால் அஞ்சலி விவகாரம் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது.