Home நாடு ஜூன் 28 முதல் தினக்குரல் நாளிதழ் வெளிவருமா?

ஜூன் 28 முதல் தினக்குரல் நாளிதழ் வெளிவருமா?

746
0
SHARE
Ad

Thinakural 27 March - 440 x 215கோலாலம்பூர், ஜூன் 20 – தமிழ் நாளிதழான தினக்குரல் கடந்த மார்ச் 28 ஆம் தேதி உள்துறை அமைச்சால், 3 மாத காலம் தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. அந்த மூன்று மாத கால தற்காலிக தடை உத்தரவு எதிர்வரும் ஜூன் 28 ஆம் தேதியோடு நிறைவடைகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பத்திரிகை மீண்டும் வெளிவருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர் ‘புதிய பார்வை’ என்ற மற்றொரு தினசரி பத்திரிகையில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்கள் என்று தெரிகிறது.

கடந்த மார்ச் 27 -ம் தேதி முதல் தினக்குரல் பத்திரிகை நிறுத்தப்பட்ட வேளையில், மார்ச் 28 தேதி முதல் ‘புதிய பார்வை’ என்ற பத்திரிகை வெளி வரத் தொடங்கியது. இந்நிலையில், தினக்குரல் மீது விதிக்கப்பட்ட மூன்று மாத தற்காலிக தடை எதிர்வரும் ஜூன் 28 ஆம் தேதியோடு முடிவடைகிறது.

உள்துறை அமைச்சிடம் இருந்து எந்தவித ஆட்சேபணையும் இல்லையென்றால், ஜூன் 28 -ம் தேதி முதல் தினக்குரல் பத்திரிகை வெளிவரலாம்.

தற்போது மலேசியாவில் 6 தமிழ் தினசரி பத்திரிகைகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இனி தினக்குரல் பத்திரிகையும் வெளிவரத் தொடங்கினால் மலேசியாவில் தமிழ் நாளிதழ்களின் எண்ணிக்கை 7 ஆக உயரும்.