Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் – சுவாரசியமான தகவல்கள்

உலகக் கிண்ணம் – சுவாரசியமான தகவல்கள்

614
0
SHARE
Ad

worldcup2014logoரியோ டி ஜெனிரோ, ஜுன் 21- தற்போது நடைபெற்று வரும் உலகக் கிண்ணப் போட்டிகள் நெடிய வரலாற்றைக் கொண்ட விளையாட்டுப் போட்டிகளாகும். இந்தப் போட்டிகள் குறித்த சில சுவாரசியமான தகவல்கள்:-

முதலாவது போட்டி எப்போது?

‘ஃபிஃபா’ (FIFA) என்றழைக்கப்படும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதலாவது ஆட்டம் 1930-ம் ஆண்டு உருகுவே நாட்டில் நடைபெற்றது. இதில் 13 நாடுகள் மட்டுமே பங்கேற்றன. 

இந்த போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்ட்டினாவை வீழ்த்தி, உருகுவே கோப்பையை கைப்பற்றியது. அதிகாரப்பூர்வ முதல்  உலக கோப்பை கால்பந்து போட்டி இது தான்.

18 கேரட் தங்கத்தினால் ஆன வெற்றிக் கோப்பை

#TamilSchoolmychoice

 வெற்றி பெற்ற அணிக்கு 1974-ம் ஆண்டில் முதன்முதலாக வழங்கப்பட்ட வெற்றிக் கோப்பை 18 கேரட் தங்கத்தினால் 11 பவுண்டு எடையில் தயாரிக்கப்பட்டதாகும். 

அடுத்த போட்டி நடைபெறும் 4 ஆண்டுகள் வரை அந்த கோப்பையை வெற்றியாளர்கள் பத்திரமாக பாதுகாப்பது கடினம் என்பதால், ‘அசல் கோப்பையைப் போன்ற தங்க முலாம் பூசப்பட்ட மாதிரி கோப்பை மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது. 

இரண்டாம் உலகப் போரின்போது போட்டிகள் நடைபெறவில்லை

1930 முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை என நடைபெற்று வந்த இந்த போட்டிகள், இரண்டாம் உலகப் போர் நடந்த 1942 மற்றும் 1946-ம் ஆண்டுகளில் நடைபெறவில்லை.

இதுவரை 19 உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளன. 200க்கும் மேற்பட்ட நாடுகள் விளையாடியுள்ள இந்த போட்டிகளில் 8 நாடுகள் மட்டுமே வெற்றிக் கோப்பையை மாறி மாறி கைப்பற்றியுள்ளன. 

அதிக முறை வென்ற நாடுகள்

அதிகபட்சமாக பிரேசில் அணி 5 முறையும், இத்தாலி 4 முறையும், ஜெர்மனி 3 முறையும் இப்போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. 

இந்த முறை சீன நாட்டு ஜோசியங்களின்படி உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புள்ள நாடாக ஜெர்மனி கணிக்கப்பட்டுள்ளது.

peleகால்பந்து விளையாட்டின் சரித்திர வீரர் பீலே

கால்பந்து விளையாட்டைப் பொருத்த வரை உலகின் பெரும் சாதனைக்குரிய வீரராக கருதப்படுபவர், பீலே.

பிரேசில் நாட்டவரான இவர் 1958, 1962 மற்றும் 1970-ம் ஆண்டுகளில் பிரேசில் அணி 3 முறை கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்தார். (1970-ல் நடைபெற்ற போட்டியில் இவர் விளையாடவில்லை.) 

17 வது வயதில் உலக கோப்பையை கைப்பற்றிய மிக இளம்வயது சாம்பியனாகவும் பீலே கருதப்படுகிறார். 

மிகக் குறுகிய நேரத்தில் போடப்பட்ட கோல்

உலக கோப்பை போட்டியில் மிக குறுகிய நேரத்தில் ‘கோல்’ பதிவு செய்த நாடு, துருக்கி.

2002-ல் தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் துருக்கி வீரர் ஹக்கன் சுக்குர், ஆட்டம் தொடங்கிய 11 வினாடிகளில் முதல் கோலை பதிவு செய்தார்.