Home தொழில் நுட்பம் இனி திறன்பேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்! 

இனி திறன்பேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்! 

617
0
SHARE
Ad

shutterstock

ஜூன் 23 – உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட், தங்களது இயங்குத்தளங்களான ஆண்டிராய்டு மற்றும் விண்டோஸ் -ல் ‘கில்லெர் ஸ்விட்ச்’ (KillerSwitch)-ஐ உருவாக்கி வருகின்றன.

பல ஆயிரம் தொகை செலவளித்து வாங்கப்படும் செல்பேசிகளை பயனர்களின் கவனமின்மையை பயன்படுத்தி திருடர்கள் திருடிச் சென்று விடுகின்றனர். என்னதான் திறன்பேசிகளை இயக்க முடியாதபடி கடவுச் சொற்கள் வைத்திருந்தாலும், நவீன மென்பொருள் தொழில்நுட்பத்தினைக் கொண்டு இயங்குதளங்களை முழுவதுமாக அழித்து புதியதாகப் பயன்படுத்துகின்றனர். இதனை தடுக்கவே கில்லெர் ஸ்விட்ச்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. எதிர்பாரத விதமாக செல்பேசிகள் களவு போய்விடும் சமயத்தில் பயனர்கள் இந்த புதிய வசதியினைப் பயன்படுத்தி செல்பேசியினை முழுவதுமாக செயல் இழக்கச் செய்து விட முடியும்.

#TamilSchoolmychoice

android

அமெரிக்கா உட்பட வளர்ந்த நாடுகளில் திறன்பேசிகளின் பயன்பாடு முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது. அதே போல் செல்பேசிகளின் திருட்டும் அதிகமாகவே உள்ளன. இதனைத் தடுக்கும் நோக்கத்தோடு இது தொடர்பான துறை அதிகாரிகள் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களிடன் இந்த வசதியினை ஏற்படுத்தி தருமாறு வலியுறுத்தி வந்தனர். சாம்சுங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் முன்னரே இந்த வசதியினை ஒரு சில ரக திறன்பேசிகளுக்கு செயல்படுத்தி விட்டன. தற்போது கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

கில்லெர் ஸ்விட்ச்களால் செல்பெசிகளைச் செயல் இழக்கச் செய்து திருடர்களுக்கு பயன் இல்லாமல் செய்ய முடிந்தாலும், கணினி மூலம் தகவல் திருட்டுகளைச் செய்யும் ஹேக்கர்கள், கில்லெர் ஸ்விட்ச்களின் சமிக்ஞைகளை திருடி பயனர்களுக்கு எதிராக அவர்களின் செல்பேசிகளை செயல் இழக்கச் செய்து விட வாய்ப்புகள் இருப்பதாகவே சம்மந்தப்பட்ட துறை வல்லுநர்களால் கூறப்படுகின்றது.