கோலாலம்பூர், பிப்.19- நம் நாட்டில் வருகின்ற 13 ஆம் பொது தேர்தலில், இந்தியர்களின் எதிர்காலைத்தை ஒளிமையமாக மாற்றும் பொதுத்தேர்தலாக அமையும்.
ஆகவே, இந்தியர்கள் முறையாக சிந்தித்து விவேகத்துடன் வாக்களிக்க வேண்டும் என்று மஇகா தேசிய உதவித்தலைவர் டத்தோ சரவணன் குறிப்பிட்டார்.
55 ஆண்டுகளாக தேசிய முன்னணி அரசாங்கம் இந்தியர்களை ஏமாற்றி விட்டது என பிரச்சாரம் செய்கிறார்கள். மலேசியாவில் உள்ள ஒட்டு மொத்த இந்தியர்களும் ஏமாந்து விட்டார்களா? நம் நாட்டில் இன்றளவும் கல்வியில், தொழித்துறையில் தம்மை ஈடுப்படுத்திக் கொண்டவர்கள் சிறப்பாக வாழ்வதைக் காண முடிகிறது என்று மேலும் கூறினார்.
இதைத்தவிர்த்து, தற்போது இந்தியர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், அவர்களின் பிரச்சனைகளை கேட்டரிந்து உதவும் பிரதமர் இருக்கிறார்.
இவ்வாறு இருக்க இவரிடம் பள்ளிக்கூடம், கோயில், என மானியம் கேட்டுக் கொண்டிருந்தால், தவறு நம்முடையதுதான் என்று சுட்டிக் காட்டினார்.
எனவே, வளர்ந்து வரும் இந்நாட்டில் படித்தவர்கள், வியாபாரத்தில் ஈடுப்பட்டவர்கள் மட்டுமே வாழ முடியும். படிக்காத இந்தியர்களுக்கு நிச்சயம் இந்த நாட்டில் எந்த வேலையும் கிடைக்காது என்று உறுதியாகக் கூறினார்.
நம்முடைய, தற்போதைய தேவை கோயில்கள் அல்ல. இந்தியர்கள் தொழில்துறையில் ஈடுப்பட பண உதவி செய்ய வேண்டும் என்பதே மிக முக்கியமாகும். அவர்கள் தொழில் துறையில் வெற்றியடைந்து வருகையில், கோயில் கட்டுவதற்கு நிதியுதவி செய்வார்கள் என்று கடுமையாகச் சாடினர் டத்தோ சரவணன்.