Home 13வது பொதுத் தேர்தல் சிலாங்கூர் சட்டமன்றம் எப்போது கலைக்கப்படும்?

சிலாங்கூர் சட்டமன்றம் எப்போது கலைக்கப்படும்?

706
0
SHARE
Ad

Khalid-Tan-Sri-Sliderஷாஆலாம், பிப்.19- சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம், சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான தேதியை அறிவிக்க தாமதித்து வருகிறார்.

தொடர்ந்து, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் தாம் இன்னும் சந்திக்கவில்லை என்றும், ‘சப் கோ மே’- விற்குப் பிறகு பிப்ரவரி 24 ஆம் தேதி அறிவிப்பு செய்யவிருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

மக்கள் கொடுத்த ஐந்தாண்டு கால தவணையை நாங்கள் அத்துமீற விரும்பவில்லை. எனவே, சிலாங்கூர் சட்டமன்றம் 22-ஆம் தேதி தானகக் கலைந்துவிடும் என்று குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் மாநிலம் தேர்தலை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.

ஆகவே, நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து ஒரே சமயத்தில் நடைபெற்றால் சிறந்தது என அவர் மேலும்  கூறினார்.