இந்நிலையில் படத்தில் நடித்த கதாநாயகிக்கே தெரியாமல் ஒரு படம் வெளியாக உள்ளது. அந்த கதாநாயகி வேறு யாருமல்ல சமந்தாதான். தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும், தனது ஒவ்வொரு படத்தை பற்றியும் அவ்வப்போது இணையத்தள பக்கத்தில் கருத்து பகிர்ந்துகொள்பவர் சமந்தா.
நீண்ட நாட்களுக்கு முன் இவர் தெலுங்கில் நடித்த படம் “ஆட்டோ நகர் சூர்யா”. நாக சைதன்யா கதாநாயகர். இப்படம் பணப் பிரச்சனை காரணமாக வெளியாகாமல் முடங்கிக்கிடந்தது. டோலிவுட் பட தயாரிப்பாளர் ஒருவர் பிரச்சனையில் தலையிட்டு சிக்கலை தீர்த்து வைத்தார்.
இதையடுத்து வரும் 27-ஆம் தேதி படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுபற்றி கதாநாயகி சமந்தாவுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
உங்க படம் வெளியாகப் போகிறதாமே? என்று சமந்தாவிடம் கேட்டபோது எந்த படம் என்று தெரியாமல் திருதிருவென முழித்தார். இதுகுறித்து தனது இணையத்தள பக்கத்தில் அவர் கூறும்போது,
“நான் நடித்த படமொன்று வரும் 27-ஆம் தேதி வெளியாகப் போகிறதாமே, யாருக்காவது தெரிந்தால் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள் என்று நக்கலாக குறிப்பிட்டிருக்கிறார் சமந்தா.