Home கலை உலகம் சிம்பு, தனுஷுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் – மனம் திறந்த விஜய்!

சிம்பு, தனுஷுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் – மனம் திறந்த விஜய்!

714
0
SHARE
Ad

vijay-simbu-dhanushசென்னை, ஜூன் 24 – இளம் நடிகர்களான சிம்பு மற்றும் தனுஷ் குறித்து மனம் திறந்துள்ளார் இளைய தளபதி விஜய். விஜய் எப்பொழுதுமே அமைதியாக இருப்பவர்.

படப்பிடிப்புக்கு வந்தால் கூட அவர் அதிகம் பேச மாட்டார், அமைதியாகத் தான் இருப்பார் என்று சக நடிகர், நடிகைகள் தெரிவித்துள்ளனர். ஆனால் நட்பு என்று வரும்போது அவர் மனம் திறந்து பேசத் தவறுவது இல்லை.

vijay,இளம் தலைமுறை நடிகர்களான சிம்பு, தனுஷ் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, விஜய் கூறுகையில்,  “அவர்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். எனக்கு அவர்களை ரொம்ப பிடிக்கும் என்றார் விஜய்.

#TamilSchoolmychoice

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிம்பு, தனுஷ், விஜய் ஆகியோர் இரவு நேர விருந்தில் கலந்துகொண்டு புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay-simbu-richaநான் ‘தல’ ரசிகன்டா என்று கூறிக்கொள்ளும் சிம்பு இளைய தளபதி விஜய்யுடன் நட்பு பாராட்டவும் தவறியதில்லை. விஜய் கத்தி படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.