Home நாடு புதிய போக்குவரத்து அமைச்சர் யார்? – இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்திக்கிறார் நஜிப்!

புதிய போக்குவரத்து அமைச்சர் யார்? – இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்திக்கிறார் நஜிப்!

604
0
SHARE
Ad

najibpmபுத்ராஜெயா, ஜூன் 25 – இன்று மதியம் 12.30 மணியளவில், பிரதமர் நஜிப் துன் ரசாக் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெர்டானா புத்ராவில் நடைபெறும் இந்த செய்தியாளர் சந்திப்பில், புதிய போக்குவரத்துத் துறை அமைச்சர் யார் என்பது அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டாவது விமான நிலையத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றிய நஜிப்,“இந்த முக்கியமான நிகழ்வில் ஹிஷாமுடின் துன் ஹுசேன் ஓன் இடைக்கால போக்குவரத்து அமைச்சராக பணியாற்றுவது இதுவே கடைசி முறையாக இருக்கலாம்” என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.