Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் முடிவுகள் (‘F’) – அர்ஜெண்டினா 3 – நைஜிரியா 2

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘F’) – அர்ஜெண்டினா 3 – நைஜிரியா 2

597
0
SHARE
Ad

போர்ட்டோ அலெக்ரி (பிரேசில்) ஜூன் 26 – உலகக் கிண்ணப் போட்டிகளில் ‘எஃப்’ பிரிவின் கடைசி இரண்டு ஆட்டங்கள் இன்று அதிகாலை மலேசிய நேரப்படி நடைபெற்றன.

இதில் அர்ஜெண்டினாவுக்கும் நைஜிரியாவுக்கும் இடையிலான ஆட்டத்தில் அபாரமான ஆட்டத்தை நைஜிரியா வெளிப்படுத்தியது.

ஆட்டம் தொடங்கிய முதல் 5 நிமிடங்களுக்குள்ளாகவே இரண்டு நாடுகளும் தலா ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சரிசமமாக்கின.

#TamilSchoolmychoice

பின்னர் அர்ஜெண்டினா மற்றொரு கோல் போட்டு 2-1 என்ற நிலையில் முன்னணியில் இருந்தது. அர்ஜெண்டினாவின் முதல் இரண்டு கோல்களையும் முன்னணி ஆட்டக்காரர் லியோனல் மெஸ்ஸி அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய குறுகிய நேரத்திற்குள்ளாகவே நைஜிரியா மற்றொரு கோல் போட்டு ஆட்டத்தை 2-2 என்ற நிலைக்கு சரிசமமாக்கியது.

தொடர்ந்து அர்ஜெண்டினா 3வது கோலைப் போட்டு மீண்டும் முன்னணிக்கு வந்தது.

அந்த ஆட்டத்தின் சில படக்காட்சிகள் இங்கே காணலாம்:

Argentina's Lionel Messi (L) celebrates with his teammates after scoring the opening goal during the FIFA World Cup 2014 group F preliminary round match between Nigeria and Argentina at the Estadio Beira-Rio in Porto Alegre, Brazil, 25 June 2014.

Federico Fernandez (L) of Argentina vies with Michael Babatunde of Nigeria during the FIFA World Cup 2014 group F preliminary round match between Nigeria and Argentina at the Estadio Beira-Rio in Porto Alegre, Brazil, 25 June 2014.

படங்கள்: EPA