Home உலகம் ஈராக் இனி தனி நாடாக இருக்க வாய்ப்பில்லை: இஸ்ரேல் அதிபர்

ஈராக் இனி தனி நாடாக இருக்க வாய்ப்பில்லை: இஸ்ரேல் அதிபர்

483
0
SHARE
Ad

israelவாஷிங்டன், ஜூன் 28 – ஈராக் இனி தனி நாடாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளதாக இஸ்ரேல் அதிபர் ஷிமான் பெரெஸ் தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை அடைந்து வரும் நிலையில், அந்நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும்  அமெரிக்க அதிபர் ஒபாமா, மூன்று இன மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட புதிய ஆட்சி ஏற்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தார். இதனை அந்நாட்டு அதிபர் மாலிக் நிராகரித்ததனால், அவருடன் பிற நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் அதிபர் ஷிமான் பெரெஸ் சந்தித்து பேசினார்.

#TamilSchoolmychoice

அந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது, “பிளவு பட்டிருக்கும் ஈராக்கினை உள்நாட்டு தலைவர்கள் ஒன்றிணைக்க வேண்டும். இராணுவ பலத்தால், நடைபெற்று வரும் வன்முறைகளின் தீவிரத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியாது.”

“அங்கு பெரும்பான்மையாக இருக்கும் மூன்று இன மக்களும், இந்த தருணத்தில் இணைந்து செயல் பட வேண்டும். ஆனால், ஈராக் தலைவர்கள் இதனை செய்ய முன் வரமாட்டார்கள். அவர்களின் இந்த முடிவு ஈராக்கை இரண்டாக உடைக்கும்” என்று கூறியுள்ளார்.