Home உலகம் இந்தியா, சீனாவால் சுற்றுச் சூழல் மாசடைகின்றது – ஒபாமா குற்றச்சாட்டு! 

இந்தியா, சீனாவால் சுற்றுச் சூழல் மாசடைகின்றது – ஒபாமா குற்றச்சாட்டு! 

605
0
SHARE
Ad

obamaவாஷிங்டன், ஜூன் 28 – சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும் நாடுகளில், ஆசியாவில் சீனாவும், இந்தியாவும் முக்கிய பங்கு வகிக்கின்றன என அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் ஒபாமா கூறியதாவது:-

“ஃபுளோரிடா போன்ற கடற்கரை மாகாணங்களில் அடிக்கடி பேரலைகள் எழும்புகின்றன. இதற்கு முக்கிய காரணம் சீனாவிலும், இந்தியாவிலும் அதிகரித்து வரும் கார்களின் பயன்பாடு மற்றும் மின் தேவைகளுக்காக பல்வேறு இடங்களில் அமைத்து வரும் மின் உற்பத்தி நிலையங்களும் தான். கார்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், அதிலிருந்து வெளியாகும் கரியமில வாயுக்களால், சுற்றுச்சூழல் அதிக அளவில் மாசுபாடு அடைகின்றது.”

#TamilSchoolmychoice

“இதில் இருந்து அமெரிக்கர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள உயர் பசுமை தொழில்நுட்பங்களை பின்பற்றத் தயாராக வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க நம்மால் முடிந்த முயற்சிகளை நாம் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.