Home இந்தியா சென்னை அடுக்குமாடி சரிவு: இடிபாடுகளில் இருந்து ஒருவர் உடல் மீட்பு!

சென்னை அடுக்குமாடி சரிவு: இடிபாடுகளில் இருந்து ஒருவர் உடல் மீட்பு!

595
0
SHARE
Ad

vbk-29-cbc3_1973242gசென்னை, ஜூன் 28 – சென்னையில் பலத்த மழை காரணமாக கட்டுமானப் பணியில் இருந்த அடுக்குமாடி கட்டிடம் சரிந்த சம்பவத்தில், இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

குறிப்பாக, அவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.

இதுவரை 8 பேர் மீட்கப்பட்டு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இடிபாடுகளில் இருந்து 1 உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய தகவல் கூறுகின்றது.

Click Here