Home இந்தியா பாமக தலைவர்களைக் கொல்ல திட்டம்: ராமதாஸ் குற்றச்சாட்டு!

பாமக தலைவர்களைக் கொல்ல திட்டம்: ராமதாஸ் குற்றச்சாட்டு!

541
0
SHARE
Ad

ramadossசென்னை, ஜூன் 30 – பாமக தலைவர்களைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியில் ஐயத்துக்குக்கிடமான நடவடிக்கைகள் நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறை நடத்திய ஆய்வில், பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது வழக்கமாக நடைபெறும் குற்றத் தடுப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாகத் தோன்றவில்லை.

நத்தம் காலனி இளவரசனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வரும் 4-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதே நாளில் பாமகவின் முக்கியத் தலைவர்கள், வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் என பத்துக்கும் மேற்பட்டோரை படுகொலை செய்ய சிலர் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

#TamilSchoolmychoice

வன்முறை செய்வதையே வாடிக்கையாகக் கொண்டவர்கள் தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயல்வதும், அவர்களுக்கு ஆதரவாகவும், வன்னியர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து, இதுபோன்ற செயல்களை சில கட்சிகள் ஊக்குவிப்பது சரியானவை இல்லை.

சாதியையும், அதற்கு ஆதரவாக உள்ள சில சட்டங்களையும் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு சமூக அமைதிக்கு சில சக்திகள் தீங்கு விளைவிப்பதை இனியும் அனுமதிக்கக் கூடாது.

நத்தம் காலனியில் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு நக்சலைட்டுகள் மூலம் ஆயுதப் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்தவர்கள் யார்?என்பதை காவல்துறையினர் கண்டறிய வேண்டும்.

இதற்காக நடுநிலையான காவல் அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் படையை அமைத்து, சமூக விரோத சக்திகளின் சதித் திட்டத்தை அடியோடு வேரறுக்க வேண்டும்.

பாமக மற்றும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.