Home இந்தியா நான் என்ன செய்ய வேண்டும்? அவரை கொல்ல வேண்டுமா? மம்தா பானர்ஜி கேள்வி

நான் என்ன செய்ய வேண்டும்? அவரை கொல்ல வேண்டுமா? மம்தா பானர்ஜி கேள்வி

586
0
SHARE
Ad

mamthaகொல்கத்தா, ஜூலை 2 – திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக மம்தா பானர்ஜி கடும் வேதனை அடைந்துள்ளார். இவ்விவகாரத்தில் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி,

“இது சாதாரண தவறு இல்லை. இதுமிகப்பெரிய தவறு. என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை எடுத்தோம். இது தனிமனிதன் தவறு. நான் என்ன செய்ய வேண்டும்? நான் அவரை கொல்ல வேண்டுமா? என்னால் என்ன செய்ய முடியும்? என்ன செய்ய வேண்டுமோ அதனை எங்களுடைய கொள்கையின்படி செய்வோம்” என்று கூறினார்.

பிரபல நடிகரும், திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான தபஸ்பால், தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு கூட்டத்தில், ‘‘திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களின் குடும்ப பெண்கள் மீது எதிர்க்கட்சியினர் கை வைத்தால் சும்மா இருக்க மாட்டேன்.

#TamilSchoolmychoice

எனது இளைஞர் படையை மார்க்சிஸ்ட் கட்சியினரது வீடுகளுக்கு அனுப்பி அவர்களது பெண்களை கற்பழிக்கும்படி சொல்வேன்’’ என்று பேசியுள்ளார். இது தொடர்பான காணொலிக் காட்சிகள் நேற்று முன்தினம் கொல்கத்தா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

mamata_1சர்ச்சைக்குரிய இந்த மிரட்டல் பேச்சு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் எழுப்பின. மேலும், கட்சியின் தலைவர் மம்தாவிற்கு கேள்விகளை முன்வைத்தன.

இதனிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேலிடம், இந்த விவகாரத்தில் உடனடியாக தபஸ்பாலை மன்னிப்பு கேட்கும்படி நேற்று உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தபஸ்பால் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார். இது தொடர்பாக கட்சி மேலிடத்துக்கு எழுதியுள்ள விளக்க கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது,

“தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்த நேரத்தில் என்னையும் அறியாமல் சில கருத்துகளை தெரிவித்து விட்டேன். இதற்காக எனது கட்சியிடமும், எனது அரசியல் நண்பர்களிடமும், மேற்கு வங்காள மக்களிடமும், குறிப்பாக சமூகத்தில் உள்ள அனைத்து பெண்களிடமும்,

இப்பிரச்சனையை வெளியிட்ட ஊடகங்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். இனி, இதுபோன்ற மோசமான, தவறான கருத்துக்களை எப்போதும் தெரிவிக்கமாட்டேன். இதற்காக மீண்டும் ஒரு முறை உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தபஸ்பால் கூறினார்.