Home கலை உலகம் அரிமா நம்பியில் பாடல் காட்சிக்காக உயிரையே பணயம் வைத்தோம் – விக்ரம் பிரபு

அரிமா நம்பியில் பாடல் காட்சிக்காக உயிரையே பணயம் வைத்தோம் – விக்ரம் பிரபு

613
0
SHARE
Ad

maxresdefault137-640x360

சென்னை, ஜூலை 2 – நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன், இளைய திலகம் பிரபு அவர்களின் செல்ல மகன் என தமிழ் சினிமாவில் எளிதில் இடம் பிடித்து விடும் பின்புலங்கள் எல்லாம் இருந்தும், விக்ரம் பிரபுவிற்கு முதல் படம் முதல் அண்மைய அரிமா நம்பி திரைப்படம் வரை காடு மலைகளில் அலைவது போன்ற கதாபாத்திரங்களே அமைந்து விடுகின்றது.

அதற்கேற்றார் போல் விக்ரம் பிரபுவும் தனது உடலை வருத்தி அது போன்ற காட்சிகளில் நடித்து வருகின்றார். ‘கும்கி’ திரைப்படத்தில் அவ்வளவு பெரிய யானையுடன் நிஜ பாகன் போலவே ஒட்டி உரசி, அதை கொஞ்சி, மிக தைரியமாக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

#TamilSchoolmychoice

தனக்கு அப்படி ஒரு தைரியத்தை கொடுத்தது தனது தாத்தா சிவாஜி கணேசன் தான் என்று விக்ரம் பிரபு அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

‘சிகரம் தொடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சண்டைக்காட்சியில் ஏற்பட்ட விபத்தில் நான்கு மாதங்கள் கையை தூக்கவே முடியாமல் இருந்ததாகவும் விக்ரம் பிரபு குங்குமத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அரிமா நம்பி திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘இதயம்’ எனும் பாடலை பாங்கோக்கில் காஞ்சினபுரி எனும் சிறிய நகரத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் படம் பிடித்துள்ளனர்.

“அங்கு மரணத்திற்கு நெருக்கமாக இருக்கும் பயங்கர பாதைகளைத் தாண்டி ஒரு இடத்தில் அப்பாடலை படம் எடுத்தனர். காலையில் 10 மணி ஆரம்பித்து மதியம் 3 மணிக்குள் கிளம்பிவிட வேண்டும். ஏனென்றால் அந்த நேரத்திலேயே அங்கு இருட்டி விடும். வழி தெரியாமல் பாறைகளில் இருந்து தவறி விழுந்தால் அவ்வளவு தான்” என்று அண்மையில் குங்குமம் வார இதழில் விக்ரம் பிரபு, படப்பிடிப்பு அனுபவம் பற்றி பிரமிப்போடு தெரிவித்துள்ளார்.