Home நாடு நியூசிலாந்து விவகாரத்தில் எதையும் மூடி மறைக்கவில்லை – அன்வாரின் கருத்துக்கு அரசு பதில்!

நியூசிலாந்து விவகாரத்தில் எதையும் மூடி மறைக்கவில்லை – அன்வாரின் கருத்துக்கு அரசு பதில்!

531
0
SHARE
Ad

Datuk-Seri-Anwar-Ibrahim-610x356கோலாலம்பூர், ஜூலை 3 – நியூசிலாந்து மலேசிய தூதரக அதிகாரியின் பாலியல் குற்றச்சாட்டை மலேசியா மூடி மறைக்க முயல்வதாக அன்வார் கூறியிருப்பது முற்றிலும் தவறானது என அரசாங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசாங்கம் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், “நியூசிலாந்து ஊடகம் ஒன்றிற்கு எதிர்கட்சித்தலைவர் அன்வார் அளித்திருக்கும் கருத்து முற்றிலும் தவறானது. நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் அன்வார் இவ்வாறு கூறியுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மலேசியாவின் நடவடிக்கைகளுக்கு நியூசிலாந்து தெரிவித்துள்ள நன்றி குறித்து அரசாங்கத்தைச் சேர்ந்த பெயர் கூற விரும்பாத அதிகாரி விளக்கமளித்தார்.

#TamilSchoolmychoice