Home சமயம் பந்திங் மாரியம்மன் ஆலயத்தில் சமய சொற்பொழிவு

பந்திங் மாரியம்மன் ஆலயத்தில் சமய சொற்பொழிவு

648
0
SHARE
Ad

saivaகோலலங்காட், பிப்.19- கோலலங்காட் மாவட்ட மன்ற உறுப்பினர் பிரிவு 11 ஏற்பாட்டில் சுங்கை சீடு தேவி ஸ்ரீ மகா மாரியம்மன்  ஆலய ஆதரவுடன் இந்து சமய சொற்பொழிவு நிகழவுள்ளது.

இச்சமயச் சொற்பொழிவு வரும் 22.2.2013 வெள்ளிக்கிழமை இரவு 8.01 மணிக்கு சுங்கை சீடு, பந்திங், தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த சமய சொற்பொழிவிற்கு  ஆலயத்தலைவர் சி.வேலுசாமி தலைமையுரையாற்றுவார். தொடர்ந்து, திருமதி வெ. விஸ்வாசமணி சிறப்புரையாற்றுவார்.

#TamilSchoolmychoice

மேலும், சிறப்பு சொற்பொழிவாளராக திருமுறைச் செம்மல்  சைவ சித்தாந்த இரத்தினம் ந.தர்மலிங்கம் உரையாற்றுவார்.

எனவே, இந்த சமய சொற்பொழிவுக்கு அனைவரும் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

மேல் விவரங்களுக்கு, அ.நாதன் 012-2695059 மற்றும் ம. முனியாண்டி அல்லது மாறன் 012-3970492 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.