Home நாடு தூதரக அதிகாரியை நியூசிலாந்திடம் ஒப்படைக்க வேண்டும் – அன்வார் கருத்து

தூதரக அதிகாரியை நியூசிலாந்திடம் ஒப்படைக்க வேண்டும் – அன்வார் கருத்து

541
0
SHARE
Ad

anwarகோலாலம்பூர்ஜூலை 3 – பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் மலேசியத் தூதரக அதிகாரியை நியூசிலாந்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டின், வெல்லிங்டன் நகரில் கடந்த மே 9 – ம் தேதி, 21 வயது பெண்மணி ஒருவரை பின் தொடர்ந்து சென்று அவரது வீட்டில் வைத்து தகாத முறையில் நடந்து கொண்டதோடு, அவரிடம் கொள்ளையும் இட்டார் என குற்றச்சாட்டின் கீழ் மலேசிய தூதரகத்தின் இரண்டாம் பிணை அதிகாரி என்ற நிலையில் பாதுகாப்பு உதவியாளராக இருந்த முகமட் ரிஸால்மன் இஸ்மாயில் (வயது 38) கைது செய்யப்பட்டார்.

இது குறித்து அன்வார் கூறுகையில், “அவர் கடந்த மே 22 –ம் தேதி, தனது குடும்பத்தோடு மலேசியாவிற்கு திரும்பியதாக கூறப்படுகின்றது. அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது. நியூசிலாந்து நாட்டில் இச்சம்வம் நிகழ்ந்திருக்கிறது. அங்குள்ள நீதிமன்றத்தில் ரிஸால்மான் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. எனவேஅந்தக் குற்றச்சாட்டை எதிர் கொள்வதற்காக ரிஸால்மனை நியூசிலாந்துக்கு நாடு கடத்த வேண்டும்என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஓர் அதிகாரியின் தவற்றை மூடி மறைக்கக் கூடாது. அப்படியே மூடி மறைத்தால் அது நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும்என்றும் அன்வார் கூறினார்.

இதனிடையேநியூசிலாந்து நாட்டின் சட்டப்படிகொள்ளை மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மலேசிய தூதரக அதிகாரியை மீண்டும் நியூசிலாந்திடம் மலேசிய அரசு ஒப்படைக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சர் அனிஃபா அம்மான் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.