Home நாடு இன்று முதல் ‘தினக் குரல்’ மீண்டும் வெளிவருகின்றது

இன்று முதல் ‘தினக் குரல்’ மீண்டும் வெளிவருகின்றது

727
0
SHARE
Ad

Thinakural 27 March - 440 x 215கோலாலம்பூர், ஜூலை 4 – இன்று வெள்ளிக்கிழமை முதல் ‘தினக் குரல்’ தமிழ் நாளிதழ் மீண்டும் வெளிவரத் தொடங்கும் என அந்தப் பத்திரிக்கைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னால், உள்துறை அமைச்சு,  தினக்குரல் பத்திரிக்கையைத்  தற்காலிகமாக  தடை செய்யும் உத்தரவை பிறப்பித்தது.

மூன்று மாத கால தடையுத்தரவு முடிவுற்ற நிலையில், மீண்டும் அந்தப் பத்திரிக்கை வெளிவர உள்துறை அமைச்சு தடையேதும் விதிக்கவில்லை எனத் தெரிகின்றது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து இன்று முதல் பத்திரிக்கைப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு, நாளை முதல் தினக்குரல் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பத்திரிக்கைத் துறையில் நீண்டகால அனுபவம் பெற்ற பி.ஆர்.இராஜனை ஆசிரியராகக் கொண்டு தினக்குரல் பத்திரிக்கை வெளிவந்து கொண்டிருந்தது.

தற்போது தினக்குரல் பத்திரிக்கையோடு சேர்த்து நாட்டில் எட்டு தமிழ் நாளிதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.