Home நாடு இந்தியர்களுக்கும், இந்துக்களுக்கும் சேவை செய்ய நல்ல வாய்ப்பு – மா சியூ பெருமிதம்

இந்தியர்களுக்கும், இந்துக்களுக்கும் சேவை செய்ய நல்ல வாய்ப்பு – மா சியூ பெருமிதம்

566
0
SHARE
Ad

GERAKANMahSiewKeong2311கோலாலம்பூர், ஜூலை 4 – இந்து அறவாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்பதில் மிகவும் பெருமையடைகின்றேன். இந்தியர்களுக்கும் இந்துக்களுக்கும் சேவை செய்யும் வாய்ப்பை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன் என்று பிரதமர் துறை அமைச்சரான டத்தோ மா சியூ கியோங் (படம்) கூறியுள்ளார்.

தான் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து பலர் குறை கூறினாலும், இந்தியர்களுக்கு சேவை செய்ய தனக்குக் கிடைத்த வாய்ப்பு என்று கெராக்கான் கட்சித் தலைவரும், தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான மா குறிப்பிட்டுள்ளார்.

கெராக்கான் கட்சி இனம், மதம் பேதமையின்றி பல்லின மக்களுக்கு பொதுவான ஒன்று என்பதால், பிரதமரின் இந்த நியமனம் பொருத்தமான ஒன்று தான் என்றும் மா நேற்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்து விவகாரங்களை பற்றி நன்கு அறிமுகமில்லாத சீனர் ஒருவரால் எப்படி, இந்து அறவாரியத்தில் திறம்பட செயலாற்ற முடியும் என்று நேற்று மா நியமனத்திற்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.