Home கலை உலகம் நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை – அஞ்சலி (படக்காட்சிகளுடன்)

நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை – அஞ்சலி (படக்காட்சிகளுடன்)

635
0
SHARE
Ad

anjaliசென்னை, ஜூலை 4 – மு.களஞ்சியத்தின் ‘ஊர் சுற்றி புராணம்’ படத்தை முடித்த பிறகே அஞ்சலி வேறு படங்களில் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கமும், இயக்குனர்கள் சங்கமும் தடை விதித்திருந்தன.

இந்நிலையில் நேற்று காலை ஜெயம் ரவி நடிப்பில் சுராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து முதல்நாள் படப்பிடிப்பை முடித்துக்கொடுத்தார் அஞ்சலி.

anjali,அஞ்சலி படப்பிடிப்பில் கலந்து கொள்வாரா, அவரை நடிக்க அனுமதிப்பார்களா என்ற பரபரப்புடன் இருந்தது. இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் படப்பிடிப்புக்குழு தயாராக இருந்தனர்.

#TamilSchoolmychoice

அஞ்சலி படப்பிடிப்பு தளத்துக்கு வந்து சுராஜ் சொன்னபடி நடிக்கவும் செய்தார். படப்பிடிப்பு இடைவேளையில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

IMG_(129)பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அஞ்சலியின் பேட்டி:

கேள்வி: உங்களுக்கு திருமணம் நடந்ததாகவும், ஹைதராபாத்தில் தெலுங்கு நடிகர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்பட்டதே?

 பதில்: என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வெளிவருகின்றன. எனக்கு திருமணம் நடந்துவிட்டது, யாருடைய கட்டுப்பாட்டிலோ இருக்கிறேன் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை, எனக்கு திருமணமும் நடக்கவில்லை.

கேள்வி: அப்படியானால் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விட்டதா? மு.களஞ்சியம் படத்தில் நடிப்பீர்களா?

பதில்: என் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விட்டது. களஞ்சியம் படத்தில் நடிக்க மாட்டேன் என்றதனால்தானே பிரச்சனையே வந்தது.

IMG_(52)கேள்வி: அப்படியானால் அவரது படத்தில் ஒருபோதும் நடிக்கப் போவதில்லையா?

பதில்: இயக்குநர் களஞ்சியம் பிரச்சனை நீதிமன்றத்தில் இருப்பதால் அவர் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது.

கேள்வி: உங்களுக்கு யாராவது மிரட்டல் விடுத்தார்களா?

பதில்: எனக்கு மிரட்டல்கள் எதுவும் வரவில்லை. நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை.

கேள்வி: உங்களுக்கு யாராவது பாதுகாப்பாக இருக்கிறார்களா?

பதில்:சினிமா உலகம்தான் எனக்கு பாதுகாப்பு. கஷ்டகாலத்தில் எனக்கு பாதுகாப்பு அளித்தது சினிமா உலகம்தான். இப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பது சினிமா உலகம்தான். அதனால்தான் என்னால் திரும்பி வந்து நடிக்க முடிகிறது.

IMG_(73)கேள்வி: கலகலப்பு படத்துக்குப் பிறகு சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினீர்கள். அதன் பிறகு ஏன் இந்த இடைவெளி?

பதில்: தமிழில் 2 வருடங்களுக்குப் பிறகு நடிக்கிறேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று காத்திருந்தேன். இயக்குநர் சுராஜ் சொன்ன கதை பிடித்திருந்தது. என்னுடைய கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது.

நகைச்சுவை தோற்றம். நல்ல படத்தில் நடிக்க வேண்டுமென்ற என்னுடைய விருப்பம் இப்போது நிறைவேறியிருக்கிறது. இனி தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன்.

IMG_(139)கேள்வி: நீங்கள் படங்களில் நடிப்பதற்கு தடை விதித்திருப்பதாக சில சங்கங்கள் அறிவித்திருந்ததே?

பதில்: நான் நடித்ததை நீங்கள் பார்த்துக் கொண்டுதானே இருந்தீர்கள். ஒரு காட்சியில் நடித்துவிட்டுதானே உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்.

கேள்வி: உங்களுக்கு தீராத வியாதி இருப்பதாக உங்கள் சித்தி சொன்னது…?

பதில்: நான் வீட்டைவிட்டு வெளியேறிய கடுப்பில் அப்படி சொல்லியிருப்பார். நான் நல்ல ஆரோக்கியத்துடன்தான் இருக்கிறேன் நன்றி என அஞ்சலி பத்திரிகையாளர் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.