சென்னை, ஜூலை 4 – திமுகவில் இருந்து விலகிய கையோடு கனடாவில் உள்ள தமிழர் அமைப்புகளின் அழைப்பை ஏற்று நிகழ்ச்சிகளில் பங்கேற்க அங்கு சென்றார் குஷ்பு.
கண்ணைக் கவரும் சேலையில் தோன்றி ரசிகர்களை வசீகரித்த குஷ்பு, மேடையில் பாடிய பாடல்களுக்காக நடனமும் ஆடி வந்திருந்த கூட்டத்தினரை மகிழ்வித்தாராம்.
கண்சிமிட்டி, தலையை சாய்த்து பேசும் வசிகரம் (மேனரிசம்). எந்தப் பெண்ணிடம் இல்லாத ஒன்று, அது ஏதோ உன்னிடம் இருக்கிறது என்று கவிப்பேரரசு வைரமுத்துவே வர்ணிக்கும் அளவிற்கு இருந்தது.
கலைஞர் தொலைக்காட்சியில் “மானாட மயிலாட” நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் குஷ்பு ஆடும் ஆட்டம் பங்கேற்பாளர்களையும், பார்வையாளர்களையும் ஆடவைக்கும்.
சினிமா, சின்னத்திரையில் ஆடும் ஆட்டத்தை விட, அரசியல் களத்தில் கடந்த நான்கு ஆண்டுகாலமாக குஷ்புவின் பேச்சுதான் பரபரப்பு. பிரச்சார களத்தில் குஷ்புவைக் காண தனி கூட்டமே கூடியது. ( ஆனால் ஓட்டு வரலேயே என்ற கவலை நமக்கு வேண்டாம்).
அதுவும் ஊதா நிற பட்டுப்புடவையில் ஜொலி ஜொலித்த குஷ்பு, ஆட்டம் போட்ட குத்து இருக்கிறதே… அப்பப்பா அசந்து போனார்கள் கனடா தமிழ் ரசிகர்கள். எந்தக் கவலையும் இன்றி மேடையில் குஷ்பு ஆடிய ஆட்டம்தான் இன்றைக்கு ஊடகங்களின் அதிர்ச்சி தகவல்.
தொடர்களிலும் உற்சாகமாக வலம் வருகிறார். மேடையிலும் பங்கேற்று தன்னுடைய இருப்பை பதிவு செய்து கொண்டிருக்கிறார் குஷ்பு. அது அதுதான் குஷ்பு.