Home இந்தியா ஈராக்கில் இருந்து 46 நர்ஸ்கள் விடுதலை!

ஈராக்கில் இருந்து 46 நர்ஸ்கள் விடுதலை!

485
0
SHARE
Ad

nursesதிருச்செந்தூர், ஜூலை 5 – ஈராக்கில் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட 46 இந்திய  நர்ஸ்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, நர்ஸ் குடும்பத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பா.ஜ.க. மாநில தலைவரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு ஈராக்கில் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டு,

விடுவிக்கப்பட்ட தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்த நர்சு லெஷிமா ஜெரோஸ் மோனிஷாவின் தாயார் எட்விஜம்மாள், உறவினர்களான அமல்ராஜ், ஜனார்த்தனம், ரமேஷ் கில்லாரி ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

rathakirushnanaபின்னர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ”பாரத பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் தீவிர முயற்சியால் தூத்துக்குடியைச் சேர்ந்த நர்சு மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நர்ச்களும் ஈராக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நாளை சொந்த ஊருக்கு வருவார்கள். அவர்களை கேரள மாநில பா.ஜ.க. தலைவர் முரளிதரன் வரவேற்கிறார் என்று தெரிவித்தார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.