Home கலை உலகம் தொலைக்காட்சி புகழ் நடிகர் பாலாஜி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்

தொலைக்காட்சி புகழ் நடிகர் பாலாஜி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்

589
0
SHARE
Ad

Balaji actorதிருப்பூர், ஜூலை 6 – திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகளின் தானியங்கி இயந்திரங்களில் (ஏ.டி.எம்) பணம் வைப்பதில், 2 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த 6 பேரை தமிழக காவல்துறையினர் அண்மையில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மோசடி செய்த பணத்தில் திருப்பூரில் நட்சத்திர கலை இரவு நடத்துவதற்காக திரைப்பட நடிகர் பாலாஜியிடம் முன்தொகையாக 10 லட்சம் கொடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து நடிகர் பாலாஜியிடம் போலீசார் விசாரணை நடத்த இருந்த நிலையில், அவர், உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

#TamilSchoolmychoice

இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திரன் முன் நேற்று நடிகர் பாலாஜி சரணடைந்து முன்ஜாமீன் பெற்றார்.

பாலாஜி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குறிப்பாக விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகமாக இடம் பெறும் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட பிரபலமாவார்.