Home உலகம் கம்போடியாவில் மலையேற்றத்திற்கு சென்ற சிங்கப்பூர் பிரஜையை காணவில்லை!

கம்போடியாவில் மலையேற்றத்திற்கு சென்ற சிங்கப்பூர் பிரஜையை காணவில்லை!

579
0
SHARE
Ad

BryS_1bCEAAYPGOசிங்கப்பூர், ஜூலை 6 – கம்போடியா நாட்டிற்கு மலையேற சென்ற 26 வயது சிங்கப்பூர் பிரஜையான சஞ்சை ராதாகிருஷ்ணாவை காணவில்லை என அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது.

இத்தகவலை சிங்கப்பூரைச் சேர்ந்த சேனல் நியூஸ் ஏசியா என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரின் தேசிய கல்வி நிறுவனத்தில் (National Institute of Education) படிப்பை முடித்த சஞ்சை, அங்கேயே பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றுகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மலையேற்றத்தில் அதிக ஆர்வமுள்ளவரான அவர், பலமுறை எவரஸ்ட் மலையேற்றக் குழுவுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,813 மீட்டர் உயரம் கொண்ட கம்போடியாவின் மிக உயரமான மலையான ப்னோம் ஆரல் (Phnom Aural) -க்கு கடந்த வாரம் தனியாக பயணம் மேற்கொண்ட சஞ்சை, கடந்த ஜூலை 3 -ம் தேதி நாடு திரும்பியிருக்க வேண்டும்.

இறுதியாக கடந்த திங்கட்கிழமை (30 – 6-14) காலை தனது தோழியுடன் செல்பேசியில் பேசிய சஞ்சை, ஞாயிற்றுக்கிழமை மோசமான வானிலையின் காரணமாக தன்னால் மலையின் உச்சியை அடையமுடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கம்போடியா அரசாங்கத்திற்கு தகவல் தெரிவித்திருப்பதாகவும், காணாமல் போனவரை தேடும் படலம் உடனடியாகத் தொடங்கப்படும் என்றும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளதாகவும் சேனல் நியூஸ் ஏசியா குறிப்பிட்டுள்ளது.

படங்கள்: சேனல் நியூஸ் ஏசியா, பேஸ்புக்